இணையவழி குற்றங்களை தடுக்கும் சர்வதேச ஒப்பம்: முதல் தெற்காசிய நாடாக கையெழுத்திட்ட இலங்கை!

Date:

புடாபெஸ்ட் சைபர் குற்ற சமவாயத்தின் இரண்டாவது மேலதிக நெறிமுறையில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த நெறிமுறையில் கைச்சாத்திட்ட முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் மின்னணு ஆதாரங்களை வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு சைபர் கிரைம் எனப்படும் இணைய வழிக் குற்றம் தொடர்பான சமவாயத்தின் இரண்டாவது மேலதிக நெறிமுறையான புடாபெஸ்ட் சமவாயம் உருவாக்கப்பட்டது.

இந்த நெறிமுறையில் இலங்கை, குரோஷியா, மோல்டோவா, ஸ்லோவேனியா, உக்ரைன் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன. இதன் மூலம், 30 நாடுகள் தற்போது இந்த நெறிமுறையில் கையெழுத்திட்டுள்ளன.

சேவை வழங்குநர்கள் மற்றும் பதிவாளர்களுடன் நேரடி ஒத்துழைப்பு, பயனர் தகவல் மற்றும் பரிமாற்ற தரவுகளை பெறுவதற்கான பயனுள்ள வழிமுறைகள், அவசரநிலைகள் அல்லது கூட்டு விசாரணைகளில் உடனடி ஒத்துழைப்பு உள்ளிட்ட மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் மின்னணு ஆதாரங்களை வெளிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை இந்த நெறிமுறை கொண்டுள்ளது.

தரவு பாதுகாப்புகள் உட்பட மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி முறைக்கு இந்த நெறிமுறையானது உட்பட்டது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...