இந்தியப் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா எழுதிய “நபிகளாரின் சமூக உறவு” நூல் வெளியீடு இன்று!

Date:

தமிழக சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா எழுதிய “நபிகளாரின் சமூக உறவு” நூல் வெளியீட்டு விழா கொழும்பு, 310 டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு இடம் பெறும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில், போரத்தின் முன்னாள் தலைவரும் ஆலோசகருமான கலாபூஷணம் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

மூஸான் இன்டர்நெஷனலின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஸ்லிம் சலாஹுத்தீன் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்வதோடு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் முன்னாள் உறுப்பினரும், இந்தியன் லோக்சபாவின் தேசிய தலைவருமான பேராசிரியர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம், காலைக்கதிரின் பிரதம ஆசிரியர் என். வித்தியாதரன் ஆகியோர் நிகழ்வில் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்து கொள்கின்றனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவர் ஏ.எல்.எம்.அதவுல்லாஹ், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், முஜிபுர் ரஹ்மான், மர்ஜான் பழீல், இம்ரான் மஹ்ரூப், அலி சப்ரி ரஹீம், முன்னாள் பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவுத், கொழும்பு மாநகர சபை பிரதி மேயர் எம்.ரி.எம் இக்பால், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி, சிலாபம் நகர சபை பிரதி மேயர் சாதிகுல் அமீன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், இந்தியாவிலிருந்து பிளாக் துளிப் குரூப் கம்பெனியின் தலைவர் முஹம்மது எஹியா, பிரபல தொழிலதிபர் டாக்டர் சதக் அப்துல் காதர், இலங்கை – இந்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் திருச்சி எம்.கே.சாகுல் ஹமீத், தமிழ்நாடு ஆர்.டி.பி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் தாவூது பாட்ஷா, தமிழ்நாடு ஏ.கே. தங்க மாளிகை குரூப் உரிமையாளர் டாக்டர் ஏ. முஹம்மது அலி ஜின்னா, தமிழ்நாடு மெளலவி சையது அபுதாஹிர் மிஸ்பாஹி, சென்னை நியூ ராயல் ட்ரேடர்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்டர் மடுவை பீர் முஹம்மது
ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கொழும்பு டைம்ஸ் பிரதம ஆசிரியர் முஹம்மது ரசூலுல்டீன், வீரகேசரி பிரதம ஆசிரியர் எஸ். ஸ்ரீ கஜன், தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், தமிழன் பிரதம ஆசிரியர் சிவராஜா, தினக்குரல் பிரதம ஆசிரியர் ஆர். பி. ஹரன் தமிழ்மிரர் பிரதம ஆசிரியர் ஏ. கனகராஜா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் ஆலோசகர் எம். இஸட். அஹமட் முனவ்வர், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன முஸ்லிம் பிரிவுப் பொறுப்பாளர் எம். கே.எம். யூனுஸ், இலங்கை ரூபவாஹிக் கூட்டத்தாபன தமிழ் செய்திப் பிரிவு உதவிப் பணிப்பாளர் சி.பி.எம். சியாம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபன முஸ்லிம் சேவைப் பொறுப்பாளர் ரினோஸியா ஜெளபர், வசந்தம் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் சித்திக் ஹனிபா ஆகியோர் ஊடக அதிதிகளாகவும் கலந்து கொள்கின்றனர்.

 

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...