இந்திய பிரதமரின் தாயார் காலமானார்!

Date:

உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 100.

உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

தாயார் ஹீராபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் மாலை மருத்துவமனைக்குச் சென்று தாயாரின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.

ஹீராபென்னின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிரதமரிடம் விளக்கிக் கூறினர். தொடர்ந்து நேற்று மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஹீராபென் மோடி குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு என்ன பிரச்னை என்பது குறித்தோ எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்தோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படாத நிலையில் அவர் உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தாயின் மரணத்தை அடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது.

என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன். என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...