இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

Date:

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வடஅந்தமான் தீவுகளுக்கு அண்மையாக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலைவிருத்தி அடைந்துள்ளது. அது ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதி மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்குப் பகுதியை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக டிசம்பர் 07 ஆம், 08 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் அவ்வப்போது அதிகரித்து வீசக் கூடிய பலமான காற்றுடன் மிகவும் கொந்தளிப்பான கடற்பரப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை : மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25 – 35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : கொழும்பில் இருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமானஅலையுடன் காணப்படும்.

Popular

More like this
Related

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் அறிமுக விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...