பாலியல் தொல்லைகள் அடிப்படை மனித உரிமை மற்றும் சுதந்திரம் மீறப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஏற்பாடுகள் தண்டனைச் சட்டக்கோவையின் 345 ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த குற்றத்திற்காக தண்டனை வழங்குவதற்கு சட்டத்தில் ஏற்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பினும் இப்பிரச்சினை தொடர்ந்து நிலவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் பாலியல் தொல்லைகள் மற்றும் அனைத்து வித பாலியல் தொந்தரவுகளைக் குற்றச் செயலாகக் கருதுகின்ற உறுப்புரையை தண்டனைச் சட்டக்கோவையில் உட்சேர்ப்பதற்கும் அதற்கு கடுமையாக தண்டனைகளை வழங்குவதற்கும் மற்றும் பாலியல் இலஞ்சத்தை குற்றமாக்குவதற்கும் புதிய உறுப்புரைகளை உட்சேர்த்து தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்தம் செய்வதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.