இலங்கையில் 5G வலையமைப்பு: வெளியான புதிய தகவல்!

Date:

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனாவுக்கு பின்னர் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இலங்கையில் 5ஜி (5G) வலையமைப்பை பயன்படுத்துவது குறைந்தது ஒரு வருடமாவது தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகொம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி திருகுமார் நடராசாவின் கருத்துப்படி, 5ஜி நெட்வொர்க்கை (வலைமைப்பை)பயன்படுத்துவதற்கு 4ஜி நெட்வொர்க்கை பயன்படுத்துவதற்கான செலவை விட இரண்டு மடங்கு செலவாகும் என்று கூறியுள்ளார்.

எனவே தற்போது நாடு இருக்கும் நிலையில், இதனை நடைமுறைப்படுத்த குறைந்தது ஒரு வருடமாவது தாமதமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னர் 2ஜி மற்றும் 4ஜி வலையமைப்புக்கள் பெரிய விஷயமாகப் பேசப்பட்டன. இந்தநிலையில் 5ஜி என்பது அடிப்படையில் 4ஜியின் மற்றொரு மேம்பட்ட பதிப்பாகும். இது நுகர்வோருக்கு அதிக திறனை வழங்குகிறது என்று திருக்குமார் நடராசா மேலும் தெரிவித்தார்.

நாட்டில் ஸ்மார்ட்போன் ஊடுருவல் அரிதாகவே, அதாவது 50 சதவீதமாகவே உள்ளது. மக்கள் தொகையில் பாதி பேருக்கு 3ஜி போன் கூட இல்லை இந்த நேரத்தில் 5ஜி நெட்வொர்க்(வலையமைப்பு) பயனுள்ளதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

5ஜி கைபேசிகள் மிகவும் வரையறுக்கப்பட்ட மற்றும் விலை உயர்ந்தவையாகவும் உள்ளன. எனவே, 5ஜி கைபேசி மற்றும் சேவைகளைப் பயன்படுத்தக்கூடிய மக்களின் சதவீதமும் குறைவாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...