உலகளாவிய அறிவு சுட்டெண்ணில் இலங்கைக்கு 79ஆவது இடம்!

Date:

உலகளாவிய அறிவு சுட்டெண் 2022 இல் 132 நாடுகளில் இலங்கை 79 வது இடத்தைப் பெற்றுள்ளது.

உலகளாவிய அறிவுக் குறியீடு என்பது கல்வி, புத்தாக்கம், அறிவு, பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற துறைகளின் அடிப்படையில் கணிக்கப்படும்.

அதற்கமைய முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவு அறக்கட்டளை மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை இணைந்து   இந்த புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளது.

இந்தச் சுட்டெண்ணில் 79ஆவது இடத்தைப் பெற்றுள்ள இலங்கைக்கு 43.4 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் அமெரிக்கா 68.37 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்து 68.28 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், ஸ்வீடன் 66.96 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

இந்த குறியீட்டில் இந்தியா 91வது இடத்தில் உள்ளது மற்றும் இந்தியா 41.52 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...

குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 இறுதி அறிக்கை கையளிப்பு.

இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி...

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிமித்தம் கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட...