காற்று மாசு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது: முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

Date:

கொழும்பு, கண்டி, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் அதிகளவு வளி மாசடைவதால் அவதானமாக இருக்குமாறு சுற்றாடல் அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

சுவாசம் மற்றும் இதய நோய்கள் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளின் போது முகக்கவசத்தை அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காற்று மாசுபாட்டின் அளவு அதற்கு நிகரான அளவை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

நிலவும் காலநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் காலநிலை காரணமாக சுவாசக் கோளாறுகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் சில சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காலநிலை இன்று (டிசம்பர் 8) மாத்திரமே நீடிக்கும் எனவும் மாலைக்குள் அது நிறைவடையும் எனவும் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.

“குறிப்பாக முகமூடிகளை அணிவது முக்கியம். நீங்கள் வீட்டிற்குள் இருக்க முடிந்தால், கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும். வீட்டில் காற்று புழங்க விடுவது நல்லது. வெளியில் வேலை செய்யும் போது கடின உழைப்பைக் குறைக்கவும்.”

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...