கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியது இந்தோனேசியா!

Date:

இந்தோனேசியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, ஜப்பான், அமெரிக்கா, கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்தியாவிலும் புதிய வகை தொற்றுகள் தென்பட தொடங்கியதால் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற சூழலில், இந்தோனேசியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டின் ஜனாதிபதி ஜோகோ விடோடோ இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார்.

அங்கு கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் திகதி, கொரோனா தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்தன.

இதனால் பாதிப்புகள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதால் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகள் விலக்கப்படுவதாக  ஜனாதிபதி விடோடோ அறிவித்தார்.

அவரது அறிவிப்பை தொடர்ந்து அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நேற்றுடன் முற்றிலும் முடிவுக்கு வந்தது.

அங்கு இதுவரை 67 லட்சம் பேருக்கு தொற்று உறுதியானதில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 583 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...