சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மெஸ்ஸிக்கு அணிவிக்கப்பட்ட புதிய அங்கி : அரபு நாடுகளில் முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே அணிவிக்கப்படும்!

Date:

கத்தார் ஆட்சியாளரும் பிபா கூட்டமைப்பின் தலைவர் இருவரும் இணைந்து மெஸ்ஸிக்கு அரபிய அங்கியான bishtஐ அணிவித்து உலகக் கோப்பையை வழங்கியமை புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதன் மூலம் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை கனவு நனவாகியுள்ளது .

மேலும், உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற மகத்தான சாதனையை மெஸ்ஸி படைத்தார். இதன் மூலம், கத்தார் உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து (Golden Ball) விருதையும் அவர் வென்றார். 2014-ஐ தொடர்ந்து இரண்டாவது முறை GOLDEN BALL விருதை முத்தமிட்டார் மெஸ்ஸி.

அரபு நாடுகளில் மிக முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே இந்த அங்கி மரியாதை வழங்கப்படும். இருந்தாலும் தங்கள் அணியின் ஜெர்சியே ஒரு வீரருக்கு உயிர் போன்றதாகும்.

தங்கள் அணியை தங்கள் நாட்டை அடையாளப்படுத்தும் ஜெர்சியை மறைக்கும் விதமாக அதன் மேல் இந்த சிறப்பு அங்கியை அணிவித்ததை ஏற்க முடியாது எனப் பலரும் கருத்து தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.

கத்தார் ஆட்சியாளரும் பிபா கூட்டமைப்பின் தலைவர் இருவரும் இணைந்து மெஸ்ஸிக்கு அரபிய அங்கியான bishtஐ அணிவித்து உலகக் கோப்பையை வழங்கினர்.

மெஸ்ஸிக்கு அணிவிக்கப்பட்ட இந்த அங்கி புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. மெஸ்ஸியை  கௌரவிக்கும் விதமாகவே இந்த அங்கி அவருக்கு அணிவிக்கப்பட்டது.

அதேவேளை, மெஸ்ஸி கோப்பையை பரிசாக பெற்ற பின்னரும் தனக்கு வழங்கப்பட்ட அந்த கௌரவத்தை மதிக்கும் விதமாக அங்கியை கழற்றாமல் வெற்றிகொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...