சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களால் புதிய அமைச்சர் நியமனங்கள் தாமதம்!

Date:

அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள் மற்றும் புதிய தூதுவர்கள் நியமனம் இடம்பெறாது என அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து எதிர்பார்த்த கடனை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையும் இந்த நிலைக்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி 15ம்  திகதிக்குள் கடன் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலை கட்சியின் செயலாளர் இரண்டு தடவைகள் வழங்கியிருந்த போதிலும், அந்த பட்டியல் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஆளுனர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள போதிலும், புதிய நியமனம் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை என தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும்,பொதுஜன பெரமுனவின் நிர்வாகத்தின் போது நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் ஐவரை நியமிக்க பொதுஜன முன்மொழிந்திருந்ததுடன், முதலில் அவர்களை நியமிக்க இணக்கம் காணப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு பேரின் பெயர்களும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...