டிலான் சேனாநாயக்கவின் கத்திக்குத்துக்கான காரணம் தெரியவந்தது!

Date:

சமூக ஊடக செயற்பாட்டாளரான டிலான் சேனாநாயக்கவை கத்தியால் குத்தி காயப்படுத்திய நான்கு பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (டிசம்பர் 26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய இரண்டு கத்திகள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் தெமட்டகொட, கொம்பனி வீதிய மற்றும் பொரளை பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 44 மற்றும் 28 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில் சந்தேகநபர்கள் தினமும் அங்கு செல்வது வழக்கம் என பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு சம்பவத்தின் பிரதான சந்தேக நபருடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்ட யுவதி ஒருவர் டிலான் சேனாநாயக்கவினால் “கேலி” செய்யப்பட்டதையடுத்து பிரதான சந்தேகநபர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

பின்னர், காயமடைந்த நபர் அவரது சட்டையை பிடித்து, “அச்சுறுத்தலுக்கு பழிவாங்கும் வகையில்” அவரை கத்தியால் குத்தியது தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பான மேலதிக உண்மைகளை வெளிக்கொணர்வதற்காக சந்தேகநபர்களை மிரிஹான தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

டிசம்பர் 14ஆம் திகதி நுகேகொடை பகொட வீதியில் உள்ள டிலான் சேனாநாயக்கவின் வீட்டிற்கு முகமூடி அணிந்த இருவர் முச்சக்கர வண்டியில் வந்து கத்தியால் குத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...