கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைக்கு வரும் நீரிழிவு நோயாளர்கள் தேவையான மருந்துகள் இன்றி தவித்து வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் ஆரம்ப மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு காரணமாக அவ் வைத்தியசாலைகளின் நீரிழிவுப்பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், பல வைத்தியசாலைகளில் இன்சுலின் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் இல்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் தனியார் மருந்து கடைகளில் சில மருந்துகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மருந்து வாங்க பணம் இல்லாமல் பலர் பரிதவித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.