‘நேர்மைக்கு மகுடம்’: 2022/23 விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

Date:

பொதுமக்களின் நலனுக்காக தம்மை அர்ப்பணித்து பணியாற்றக்கூடிய நேர்மையான அரச ஊழியர்களை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23க்கு பரிந்துரைத்து, நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் செயற்பாடுகளை தடுக்க கைகோர்க்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

சமூக மட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய  அரச உத்தியோகத்தர்கள் பற்றி உங்களுக்குத் தெரியும்  எனில்,  உங்களுக்குரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

ஐந்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய மற்றும் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னும் குறைந்தது ஐந்து வருட சேவைக் காலத்தினைக் கொண்ட நிரந்தர அரச ஊழியர்கள் அனைவரும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது இத்தகுதியுடைய அரச ஊழியர்களை குறித்த விருதுக்கு பரிந்துரைக்கலாம்.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்தவுடன் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் சுயாதீன நடுவர் குழுவினால் மதிப்பாய்வு மற்றும் நேர்காணல்கள் செய்யப்பட்டு தகுதி வாய்ந்த இறுதி 10 விண்ணப்பதாரிகள் தெரிவுசெய்யப்படுவார்கள்.

எதிர்வரும் 2023 ஜனவரி 31ம் திகதிக்கு முன்னர் உங்களது விண்ணப்பங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ள: www.integrityicon.lk அல்லது
தொடர்பு கொள்ளுங்கள் 0711 295 295/ 0763223442 / icon@tisrilanka.org.
இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 – நேர்மையின் மீது ஓர் ஒளி பிரகாசிக்கட்டும்! இத்தகவலை பிறருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...