பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேனவுக்கு “சந்த தெக்கட சந்த” நூல் கையளிப்பு

Date:

பிரபல எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான சமன் புஷ்ப லியனகேயின் மொழிப்பெயர்ப்பில், சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு பற்றிய  ‘සඳ දෙකඩ සඳ’ (நிலவைப் பிளந்த நிலவு) என்ற நூலின் பிரதிகள், இன்று பத்தர முல்லையில் உள்ள இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் L.M.D .தர்மசேன மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் (முகாமைத்துவம்) அமித் ஜயசுந்தர ஆகியோருக்கு, பஹன மீடியா ஊடக அமைப்பின்  தலைவர்,செய்யத் சாலிம் மௌலானாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

தேசிய ஒற்றுமைக்கான சர்வமத அமைப்பின் இணைத் தலைவரும் கல்வி அமைச்சின் ஆலோசனை சபை உறுப்பினருமான கலாநிதி அஸ்ஸையத், ஹசன் மௌலானா அல்காதிரி, பஹன மீடியா ஊடக அமைப்பின்  பணிப்பாளர் அஷ்.அப்துல் முஜீப் (கபூரி) ஆகியோர் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

இறைத்தூதர் முகம்மது நபி அவர்கள் பற்றி மிக அழகிய முறையில் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட இந்நூலின் சிங்கள மொழியிலான நூலின் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பில் வெகு விமர்சையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...