பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் அவரது மகனைத் தாக்கி வீட்டை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 4 மாணவர்கள் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த 4 பேரும் இன்று காலை பேராதனை பொலிஸ் நிலையத்திற்கு வந்து சரணடைந்தாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
மோதலுக்கு காரணமான விடயங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் மேலும் இரு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.