களுத்துறை வடக்கு பொலிஸார் இன்று காலை களுத்துறை பாடசாலை மாணவர்களிடம் சோதனை மேற்கொண்டனர்.
பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் சிறப்புப் பயிற்சி பெற்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கும் நாயான ‘டேலியும் சோதனைக்கு வரவழைக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்கள் ஐஸ் போதைப்பொருளுக்கு இழுக்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ள பொலிஸார் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இன்று நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளுக்கு அருகில் பொலிஸார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.