பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அன்றைய தினம் இந்த சந்தேகநபருக்கு எதிரான சாட்சியங்களின் சுருக்கத்தை நீதிமன்றில் முன்வைக்குமாறு பயங்கரவாத தடுப்பு பணியகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வசந்த முதலிகே நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது சிறைச்சாலை பேரூந்துக்குள் இருந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
“இந்த நாட்டில் உள்ள மக்களின் பிரச்சினைகளை பயங்கரவாதம் என்று அழைத்தால், நாங்கள் தயார், இன்னும் பல ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் கேவலமான அரசாங்கங்களுக்கு முன்னால் மண்டியிடுவதில்லை’ என்று கூறினார்