மத்திய வங்கி சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் இலங்கை மத்திய வங்கியின் நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனாகவும் பயன்வாய்ந்ததாகவும் மேற்கொள்வற்கு இயலுமாகும் வகையில் ஆரம்ப சட்டமூலத்திற்கு புதிய திருத்தங்களை உட்சேர்த்து மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலத்திற்காக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது