மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்தினால், ஆடை உற்பத்தி நலிவடையும்!

Date:

மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தினால் ஆடைத் தொழில் முற்றிலும் நலிவடையும் என வர்த்தக மண்டல ஊழியர்களின் தேசிய மையம் கூறுகிறது.

ஆடைத் துறையில் உள்ள பல பாரிய கைத்தொழில்களை நாட்டிலிருந்து எடுக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதியில் 03 ஆடைத் தொழிற்சாலைகளை  விலக்கிக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை மின்சார சபைக்கு ஏற்படும் நட்டத்தை குறைக்கும் வகையில் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது.

இதற்கு அமைச்சர்கள் குழுவின் ஒப்புதல் ஏற்கனவே கிடைத்துள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைக்கு மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தரவுகளின்படி மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை> எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 70 வீத மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுமானால் அது மக்களால் தாங்க முடியாததாக இருக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...