பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் டி. என். எல். மஹவத்த இன்று (12) உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்வெவ சிறிதம்ம தேரரை, சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய பிணையில் விடுவிக்குமாறு கடந்த 23ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் காலிமுகத்திடல் போராட்ட சம்பவம் தொடர்பில் இந்த இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.