லங்கா சதொச நிறுவனம் 05 பொருட்களின் விலைகளை இன்று (14) முதல் குறைத்துள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோ பருப்பு 4 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.
ஒரு கிலோ கோதுமை மா 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 250 ரூபாவாகும்.
இதேவேளை, ஒரு கிலோ பூண்டு 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 460 ரூபாவாகும்.
ஒரு கிலோ வெங்காயம் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 190 ரூபாவாகும்.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 490 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.