ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை: தலிபான்கள் அதிரடி உத்தரவு

Date:

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆறாம் வகுப்பு மேல் கல்வி கற்க தடை, ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இப்போது ஆப்கானிஸ்தானில் மீண்டும் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டு இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை மாணவிகள் கல்லூரிகளுக்கு நுழைய கூடாது என்று ஆப்கானிஸ்தான் உயர்கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

*வெலிகமவில் ஆரம்பமான ‘Made in Sri Lanka’ கண்காட்சி*

உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்தும் ‘Made in Sri Lanka’...

2026 வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் பெப்ரவரி ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம்...

டிசம்பர் 29 முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை

டிசம்பர் 29 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கிழக்கிலிருந்தான மாறுபட்ட...