‘ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் தண்ணீர் வசதி இல்லை’

Date:

நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் தண்ணீரின்றி காணப்படுவதாகவும், 1800 இற்கும் அதிகமான கழிவறைகள் இல்லாத பாடசாலைகள் நாட்டில் இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் வரவு செலவுத் திட்ட தலைப்புகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எரான் விக்ரமரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் மக்களுக்காக முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர் பெரிய ஹோட்டல்களில் விருந்து வைப்பதாலோ, அமைச்சர்களைப் பெற்றெடுப்பதாலோ பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது.

இந்த பட்ஜெட் மக்களுக்காக தாக்கல் செய்யப்பட்டதா? தங்கள் பிழைப்புக்காகவா? என்ற கேள்வி எழுவதாகவும் எரான் விக்கிரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...