ஆள் கடத்தல் குறித்து விசாரணை நடத்த குழுவொன்று ஓமானுக்கு புறப்பட்டது!

Date:

ஆள்கடத்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஓமானுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்  தெரிவித்துள்ளது.

ஓமானில் மனித கடத்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பணிப்புரையின் பேரில் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டனர்.

இந்தக் குழுவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர், மூன்று விசாரணை அதிகாரிகள் மற்றும் ஒரு பொலிஸ் பரிசோதகர் மற்றும் CID இன் ஒரு பெண் துணைப் பரிசோதகர் ஆகியோர் அடங்குவதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெண் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வீட்டு வேலையாட்களாக ஓமானுக்கு அனுப்பியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து, இந்த மனித கடத்தல் கும்பல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்போது இலங்கைப் பெண்களை சுற்றுலா விசாவின் கீழ் ஓமான் நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்து துஷ்பிரயோகம் செய்வதும் தெரியவந்தது.

நாட்டில் தங்கியுள்ள பெண்கள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பெருமளவானவர்களிடம் இந்தக் குழு விசாரணை நடத்த உள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை...

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...