ஆள் கடத்தல் குறித்து விசாரணை நடத்த குழுவொன்று ஓமானுக்கு புறப்பட்டது!

Date:

ஆள்கடத்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஓமானுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்  தெரிவித்துள்ளது.

ஓமானில் மனித கடத்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பணிப்புரையின் பேரில் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டனர்.

இந்தக் குழுவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர், மூன்று விசாரணை அதிகாரிகள் மற்றும் ஒரு பொலிஸ் பரிசோதகர் மற்றும் CID இன் ஒரு பெண் துணைப் பரிசோதகர் ஆகியோர் அடங்குவதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெண் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வீட்டு வேலையாட்களாக ஓமானுக்கு அனுப்பியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து, இந்த மனித கடத்தல் கும்பல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்போது இலங்கைப் பெண்களை சுற்றுலா விசாவின் கீழ் ஓமான் நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்து துஷ்பிரயோகம் செய்வதும் தெரியவந்தது.

நாட்டில் தங்கியுள்ள பெண்கள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பெருமளவானவர்களிடம் இந்தக் குழு விசாரணை நடத்த உள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...