இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Date:

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 500 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கமானது மேற்கு – வடமேற்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேலும் வலுவடைந்து சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியானது டிசம்பர் 8 ஆம் திகதி காலை தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் வடதமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் தென் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் – அவ்வப்போது மழை பெய்யும்

மட்டக்களப்பு – சிறிதளவில் மழை பெய்யும்

கொழும்பு – சிறிதளவில் மழை பெய்யும்

காலி – சிறிதளவில் மழை பெய்யும்

யாழ்ப்பாணம் – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

கண்டி – பிரதானமாக சீரான வானிலை

நுவரெலியா – பிரதானமாக சீரான வானிலை

இரத்தினபுரி – பிரதானமாக சீரான வானிலை

திருகோணமலை – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

மன்னார் – அவ்வப்போது மழை பெய்யும்

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...