இந்தியாவிலிருந்து வந்த தூசி துகள்களின் தாக்கம் காரணமாக காற்று மாசடைந்துள்ளமை சற்று குறைவடைந்து வருகின்றது.
அதற்கமைய அண்மையில் வளிமண்டலத்தில் வெளியிடும் நச்சு வாயுக்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்திருந்தது.
எனினும் இன்னும் இந்த நிலைமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி காற்றின் தரக் குறியீடு:
கண்டி – 84
தம்புள்ளை – 53
நீர்கொழும்பு – 118
கொழும்பு – 105
திகன – 25
நுவரெலியா – 73
அம்பலாந்தோட்டை – 78
101 முதல் 150 வரையிலான மதிப்புகள் “உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு ஆரோக்கியமற்றவை” என்றும் 151-200 “ஆரோக்கியமற்றது” என்றும் கருதப்படுகிறது.