இலங்கையில் எரிபொருள் பயன்பாடு வீழ்ச்சி!

Date:

நாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஆண்டு இறுதிக்குள் எரிபொருள் தேவை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடி, நுகர்வு கணிசமான அளவு குறைவு, QR முறைப்படி மட்டும் எரிபொருளை விடுவித்தல், எரிபொருள் இருப்புக்களை பராமரிக்க நுகர்வோர்கள் முயற்சி எடுக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் எரிபொருளின் தேவை குறைந்துள்ளது.

முன்னதாக மாதாந்தம் சுமார் 4000 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் டீசல் தேவை இருந்த நிலையில் தற்போது அது 2000 மெற்றிக் தொன்களாக குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் முதல் ஜூலை வரையிலான 4 மாத காலத்தில் தினசரி டீசல் பயன்பாடு 6,496 லிருந்து 2,299 தொன்னாகவும், பெற்றோல் பயன்பாடு 3,764 லிருந்து 1,226 தொன்னாகவும் குறைந்துள்ளது.

அதனுடன் ஒப்பிடும் போது, ​​வருட இறுதியில் நாட்டில் எரிபொருளுக்கான தேவை மேலும் குறைந்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் ஈட்டியுள்ளதுடன், உலக சந்தையில் எரிபொருள் விலையும் கணிசமான அளவு குறைந்துள்ளது.

இலங்கையில் உரிய எரிபொருள் விலை குறைப்புடன் ஒப்பிடும் போது ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை 50 முதல் 100 ரூபா வரை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் விலை சூத்திரத்தின் பிரகாரம் தீர்மானிக்கப்படுவதாகவும், இதுவரையில் எரிபொருள் விலையை திருத்தும் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சித்திரவதைக்குள்ளாகும் பலஸ்தீன மருத்துவர் அபு சபியா: இஸ்ரேலுக்கு ஐநா நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன மருத்துவர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியா (Dr. Hussam...

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்

இன்றையதினம் (26) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்...

காசாவில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்: தந்தையை மிரட்ட குழந்தையை சித்திரவதை செய்த இஸ்ரேலியப் படை!

காசா முனையில் நிலவும் போர்ச் சூழலில், மனிதநேயமற்ற முறையில் ஒரு வயதுக்...