மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும் கோடீஸ்வரருமான பில் கேட்ஸ் இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான உலகளாவிய மாநாட்டில் கலந்து கொள்ள பில் கேட்ஸ் போன்ற சர்வதேச பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.