உணவுப் பணவீக்கத்தில் இலங்கைக்கு 7ஆவது இடம்!

Date:

உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் உலக வங்கியின் சுட்டெண் பட்டியலில் இலங்கை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அந்த சுட்டெண்ணின் படி இலங்கையின் உணவுப் பணவீக்கம் 74 சதவீதமாக உள்ளது.

உணவுப் பணவீக்கம் 86 வீதத்துடன் கடந்த ஆண்டு சுட்டெண்ணில் இலங்கை ஆறாவது இடத்தில் இருந்த நிலையில் இம்முறை இலங்கை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது

உலக வங்கியின் சமீபத்திய உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்தக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, உலக வங்கிக் குறியீட்டின்படி, உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடாக ஜிம்பாப்வே முதல் இடத்தைப் பிடித்துள்ளது, மேலும் அதன் உணவுப் பணவீக்கம் 321 சதவீதமாக உள்ளது.

லெபனான் மற்றும் வெனிசுலா மாநிலங்கள் அந்த குறியீட்டில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளது.

இரு நாடுகளின் உணவு பணவீக்கம் முறையே 203 மற்றும் 158 சதவீதமாக உள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...