உனவடுன ரயில் விபத்தில் தாயை இழந்த 4 வயது ரஷ்யக் குழந்தை தனிமையில்!

Date:

நேற்றையதினம் காலி, உனவடுனவில் ‘ரஜரட்ட ரஜின’ அதிவேக ரயிலில் முச்சக்கர வண்டி மோதி உயிரிழந்த ரஷ்ய பெண்ணின் நான்கு வயது மகளை ஏற்றுக்கொள்ள எவரும் முன்வரவில்லை.

முச்சக்கரவண்டி சாரதியின் அஜாக்கிரதையினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது இளம் மகளும் உனவட்டுன பகுதியில் தங்கியிருந்ததாகவும், நான்கு வயதுடைய தனது மகளை பகல்நேர பராமரிப்பு நிலையத்தில் இறக்கிவிட்டு திரும்பிச் செல்லும் வழியில் இந்த கோர விபத்தை சந்தித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணுக்கு இலங்கையில் உறவினர்கள் யாரும் இல்லாததால், கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மூலம் உறவினரை தொடர்பு கொள்ளும் வரை குழந்தை பகல்நேர பராமரிப்பு மையத்தில் இருக்கும்.

நேற்று காலை உனவட்டுன பிரதேசத்தில் பெலியஅத்தவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜின புகையிரதத்தின் முச்சக்கர வண்டி மோதியதில் ரஷ்ய பெண்ணும் அதன் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

புகையிரத கடவையின் எச்சரிக்கை சமிக்ஞை அமைப்பு செயலிழந்துள்ளதாகவும், முச்சக்கரவண்டியை முன்னோக்கி செலுத்த வேண்டாம் என சம்பவத்தின் போது அங்கிருந்தவர்கள் கூறிய போதும் சாரதி அதனை புறக்கணித்து புகையிரத பாதையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...