‘ஒரு முட்டையை 25 ரூபாவிற்கு வழங்க முடியும்’

Date:

ஒரு முட்டையை 25 ரூபாவிற்கு வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன  தெரிவித்துள்ளார்.

இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்து அந்த முறையில் வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.

சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் முட்டை விலை உயர்ந்துள்ளதாகவும், பெரிய அளவிலான முட்டை உற்பத்தி நிறுவனங்கள் செயற்கையாக முட்டை தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளதாகவும் கூறினார்.

மூலப்பொருட்கள் உள்ளிட்ட முட்டை உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், சிறு மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் குழு முட்டை உற்பத்தியில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கேக் மற்றும் பேக்கரி உரிமையாளர்களுக்கு தேவையான அளவு முட்டைகள் சந்தையில் கிடைப்பதில்லை என்றும், தற்போது முட்டைகள்  50 சதவீதம் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முட்டைகள் இல்லாததால், பேக்கரி உரிமையிளர்கள் கேக் உள்ளிட்ட  பேக்கரி பொருட்களை நிறுத்தியுள்ளனர்

முட்டை தட்டுப்பாடு மற்றும் முட்டை விலையை குறைக்க முட்டையை இறக்குமதி செய்வதைத் தவிர வேறு வழியில்லை என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...