கடத்தப்பட்டு பொரளை மயானத்தில் விடப்பட்ட ஜனசக்தி நிறுவனத்தின் தலைவர் உயிரிழப்பு!

Date:

பொரளை மயானத்தினுள் சிலரால் சித்திரவதை செய்யப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்fடர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (15) இரவு உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் குருந்துவத்தை மல் வீதி வீட்டில் இருந்து பல கோடி ரூபா கடனாகப் பெற்றுக் கொடுக்கவுள்ள ஒருவரை சந்திக்கச் செல்வதாக மனைவியிடம் சொல்லிவிட்டு குறித்த நபர் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது மனைவி சிறிது நேரத்தில் அவரை அழைத்ததாகவும், அவரின் தொலைபேசி துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் பொரளை மயான அருகில் இருப்பதாக மனைவியின் கையடக்கத் தொலைபேசிக்கு சமிஞ்ஞை கிடைத்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபரின் மனைவி, நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியிடம் கூறி அவரை பொரளை மயானத்திற்கு அனுப்பி வைத்ததாகவும், அவரிடம் நடத்திய விசாரணையில், காரின் சாரதி இருக்கையில் குறித்த நபரின் கைகள் கப்பியினால் கட்டப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்ததாகவும், கழுத்து ஒரு வயரினால் இறுக்கப்பட்டு இருந்ததாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி, நிறைவேற்று அதிகாரி மயானத்தில் பணிபுரியும் தொழிலாளியின் உதவியுடன் அவரின் கைகளிலும் கழுத்திலும் இறுக்கமாக கட்டப்பட்டிருந்த கம்பிகளை அகற்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் மிகவும் ஆபத்தான நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

காரை விட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்வதை மயானத்தில் பணிபுரிபவர் பார்த்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் குறித்த நிறுவனத்தில் பல கோடி ரூபா கடன் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் குறித்த நிறுவனத்தின் தலைவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மூன்று முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

கடத்திச் சென்ற சிலர் அவரை மயானத்திற்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்து கழுத்தை நெரித்து கொன்றதாக சந்தேகிக்கப்படுவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொரளை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் ஏ.ஜே.எம்.ஆர். சமரசிங்கவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பொலிசார் வெளியிட்டிருந்த அறிக்கை கீழே!

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...