5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் பேர் உணவுப் பணவீக்கம் காரணமாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக குடும்ப நலப் பணியகத்தின் ஊட்டச்சத்து குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களைக் கண்டறியும் தேசிய சட்டமன்ற துணைக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உணவுப் பற்றாக்குறையால் கர்ப்பிணித் தாய்மார்களின் உடல் நிறை குறியீட்டெண் மதிப்பு மிகவும் குறைவாக இருப்பதும் தெரியவந்தது.
கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்ப சுகாதாரப் பணியாளர்கள் மட்டத்தில் முன்னுரிமைகளை இனங்கண்டு, இந்த சுகாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென குழுவின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.