நாட்டில் வட கிழக்கு பகுதியில் உள்ள சமுத்திரத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை சற்று வலுவடைந்து வருவதனால், காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி நிலவுகின்றது.
இதனால் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளமையால், கடலை அண்டிய மக்களும், வெளியிடங்களில் பயணிக்கும் மக்களும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றார்கள்.
அத்துடன் அதிக குளிரான நிலை காணப்படுவதால் இதய நோயாளிகள், முதியோர்கள் மற்றும் சிறுவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்..