ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் காய்,கறிகளை பயன்படுத்தி கிறிஸ்துமஸ் மரமொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
முட்டைக்கோஸ், கீரை, வெண்டிக்காய், பச்சை மிளகாய், கீரை என சுமார் 2000 மரக்கறிகளால் உருவாக்கப்பட்ட ஒரு வகையான கிறிஸ்துமஸ் மரத்திற்கான இறுதி ஏற்பாடுகளை அலங்கரிப்பாளர்கள் குழுவொன்று நேற்று மேற்கொண்டுள்ளது.
Softlogic Insurance PLC நிறுவனமானது நகர்ப்புற மக்களிடையே காய்கறி விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக இந்த செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது.