நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சிறந்து விளங்கும் சூழலை உருவாக்குவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற “2022 தேசிய சிறப்பு விருது வழங்கும் விழாவில்” கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதில் முக்கிய பங்கேற்பாளர்களாக தொழில்துறையினரை வலுவூட்டுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை கைத்தொழில் சபை 21வது தடவையாக இதனை ஏற்பாடு செய்திருந்ததுடன் சிறந்த கைத்தொழில்துறையினரும் இங்கு மதிப்பீடு செய்யப்பட்டனர்.
உடைந்த பொருளாதாரத்தைப் பார்த்து வருந்துவதற்குப் பதிலாக, வளமான எதிர்காலத்திற்கு இடமளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.
அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜப்பான் மற்றும் ஜேர்மனியை மீளக் கட்டியெழுப்புவது இலங்கைக்கு முன்னுதாரணமாக அமையும் எனவும் தெரிவித்தார்.