சுனாமியால் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களை நினைவு கூறும் வகையில் இந்நாளில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் “தேசிய பாதுகாப்பு தினத்தின்” பிரதான நிகழ்ச்சி இன்று காலை ஹிக்கடுவ பரேலிய சுனாமி நினைவு தூபிக்கு அருகில் இடம்பெற்றது.
மேலும் யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
மலையக மக்களும் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர். ஹட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில் ஹட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் குறித்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கான 18ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சுனாமி நினைவேந்தல் ஹம்பாந்தோட்டை பிரதான பஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
டிசம்பர் 26, 2004 அன்று இலங்கையின் கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கியது. இந்த அனர்த்தத்தில் 31,229 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4,093 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 21,411 பேர் இந்த அனர்த்தத்தில் காயமடைந்துள்ளனர். சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் 2006 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் 26 ஆம் திகதியை தேசிய பாதுகாப்பு தினமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்தது.