சுற்றுலாப் பயணிகளின் வருகை டொலர் வருமானத்தை அதிகரிக்கிறது!

Date:

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட தரவு அறிக்கைகளின்படி, 2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 1129.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது.

நவம்பர் மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை மூலம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் மாதத்தில் 59759 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர், இது ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 42 வீத அதிகரிப்பாகும்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 628017 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில், சுற்றுலாப் பயணிகளின் சராசரி தினசரி வருகை 1991 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான 11 மாதங்களில் 104,989 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன் இலங்கைக்கு கிடைத்த வருமானம் 273.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...