டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் 03 மணி நேரத்தில், ரயில்வே துறைக்கு 3 இலட்சத்து 78,000 ரூ. வருமானம்!

Date:

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நேற்று காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரை இடம்பெற்ற விசேட பயணச்சீட்டு பரிசோதனையின் போது  பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் கோட்டை புகையிரத நிலைய ஊழியர்கள் இணைந்து இந்த விசேட பரிசோதனையை மேற்கொண்டதாக புகையிரத வர்த்தக பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.

அங்கு கைது செய்யப்பட்ட 78 பேர் இது தொடர்பான அபராதத் தொகையை ஒரே நேரத்தில் செலுத்தியுள்ளனர்.

அவர்களிடமிருந்து அபராதத் தொகை இரண்டு இலட்சத்து 38,770 ரூ. ஏனைய 46 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய அபராதத் தொகை 39,840 ரூபா எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, டிக்கட் இன்றி கைது செய்யப்பட்ட 124 பேரிடம் இருந்து அறவிடப்பட்ட மொத்த அபராதத் தொகை 3 லட்சத்து 78,610 ரூபாய்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...