இலங்கையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை இலங்கையின் மேற்கு கடல் பகுதிக்கு நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்குக் கரையிலிருந்து தீவுக்குள் நுழைந்து இலங்கையை கடந்து செல்வதாகவும் அதன் தாக்கம் காரணமாக நாட்டில் பல பகுதிகளை பாதித்துள்ள கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை நாளையும் தொடரும் என திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும், சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த தாக்கத்தினால் நாடளாவிய ரீதியில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என பேச்சாளர் தெரிவித்தார்.