நாளை மேற்கு கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை!

Date:

இலங்கையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை இலங்கையின் மேற்கு கடல் பகுதிக்கு நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்குக் கரையிலிருந்து தீவுக்குள் நுழைந்து இலங்கையை கடந்து செல்வதாகவும் அதன் தாக்கம் காரணமாக நாட்டில் பல பகுதிகளை பாதித்துள்ள கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை நாளையும் தொடரும் என திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும், சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த  தாக்கத்தினால் நாடளாவிய ரீதியில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என பேச்சாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

முஸ்லிம் காங்கிரஸின் எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்....

ராஜிதவின் வழக்கு விசாரணை – மேலதிக சாட்சியப் பதிவு நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல்...

ஏர்பஸ் ஒப்பந்த ஊழல்; நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட அறிவுறுத்தல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

சவூதி அரேபியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா நிறைவு!

சவூதி அரேபியாவின் தாயிஃப் (Taif) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டகப் பந்தய மைதானத்தில்,...