நீதிபதி இருக்கையில் அமரப்போகும் முதல் மௌலவி!

Date:

கண்ணூர் மாவட்டத்தில் கட்டாங்கோடு சேர்ந்த  அப்துல் ராசிக் என்பவர் ஆலிமாக இருந்து முதன் முதலாக நீதிபதியாகின்றார்.
இவர் ஆரம்ப கல்வி முதல் பத்தாம் வகுப்பு வரை மலையாளத்தில் பயின்றவர்.  இவரது தந்தை முஹம்மது மரணிக்க தாயார் ஆமினா இவரை மார்க்க கல்வி பயில அனுப்பி வைத்தார்.

குற்றியாடி சிறாஜுல் ஹுதா அரபிக் கல்லூரியில் +2 உடன் 2005 முதல் 2012வரை மார்க்க கல்வி பயின்று சுரைஜி ஸனது பெற்றார்.

சிறாஜுல் ஹுதா அரபிக் கல்லூரியில் ஏற்பட்ட கல்வித்தாகம் அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.

கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பி.ஏ.ஆங்கில இலக்கியம், சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து எம்.ஏ.ஆங்கில இலக்கியமும் தேறியவர் காரந்தூர் மர்க்கஸ் சட்டக்கல்லூரியில் சேர்ந்து ஸகாஃபி ஸனதுடன் எல்.எல்.பி முடித்த அப்துல் ராசிக் மீண்டும் திருப்பதி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எல்.எல்.எம் தேர்ச்சி பெற்றார்.

தற்போது வடகரா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் நிலையில் சமீபத்தில் கேரள மாநில அரசு நடத்திய முன்ஷிஃப் பதவிக்கான ஜுடிசியல் தேர்வு எழுதினார்.

இரண்டு தினங்களுக்கு முன் வெளியான தேர்வு முடிவுகளில் அப்துல் ராசிக் 28வது இடத்தில் தேர்ச்சி பெற்று நீதிபதி இருக்கையில் அமரப்போகும் முதல் மௌலவி எனும் பெருமை பெறுகிறார்.

மார்க்க கல்வியுடன் உலகக்கல்வி இணைந்த பாடத்திட்டத்தின் அவசியத்தை உணர்ந்த கேரள முஸ்லிம் சமூகத்தின் பல்லாண்டுகளுக்கு முந்தைய முயற்சிகள் தற்போது பல்வேறு அரசு வேலை வாய்ப்புகளில் பயனளித்து வருகிறது மகிழ்ச்சியான செய்தி.

Popular

More like this
Related

பேரிடரால் சேதமடைந்த மத ஸ்தலங்களை கட்டியெழுப்ப ஹஜ் குழுவிடமிருந்து ரூ. 5 மில். நன்கொடை

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களின் மறுசீரமைக்கும் பணிகளுக்காக,...

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை எதிர்பார்ப்பு

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு, குறிப்பாக பெப்ரவரி 10 வரை கனமழை...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,தெற்கு மற்றும் சப்ரகமுவ...

பேரிடரால் பாதிக்கப்பட்ட தொழில்துறைக்கு ரூ. 200,000 வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர...