பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுப்பதற்கான நாடளாவிய வேலைத்திட்டம்

Date:

பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் பரந்த அளவிலான வேலைத்திட்டம் ஜனவரி 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கிராமம், நகரம் என்ற பேதமின்றி ஒவ்வொரு மாகாணத்தையும் உள்ளடக்கிய வகையில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், பாடசாலைகளுக்குள் ஐஸ் போதைப்பொருள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் பல சம்பவங்கள் தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

‘குழந்தைகள் 8 மணி நேரம் பாடசாலைகளில் இருக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் பாடசாலைக்கு வெளியே உள்ளனர். எனவே, இதற்கு பெற்றோரின் பொறுப்பு உள்ளது’ என்றார்.

இது கொழும்பில் மட்டுப்படுத்தப்படவில்லை எனவும் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் இந்த போதைப்பொருட்கள் தொடர்பில் அறிக்கைகள் தயாரிக்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...