பாலின சமத்துவ சட்டமூலத்தின் முதலாம் வரைபு நிறவடைந்தது!

Date:

பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவது தொடர்பான சட்டமூலத்தின் முதலாம் வரைபு நிறைவடைந்துள்ளது.

இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் தெரியவந்தது.

விசேட குழு அதன் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர்  சுதர்ஷனி பர்னாந்துபுல்லே தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தெரியவந்தது.

பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பது, பெண் உரிமை தொடர்பில் ஓம்புட்ஸ்மன் ஒருவரை நியமித்தல் உள்ளிட்ட பொறிமுறையொன்றை நிறுவுதல், பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அந்த உரிமைகளை மீறும் போது ஆணைக்குழுவினால் எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலம் தொடர்பில் பொதுமக்கள், பாலின நிபுணர்கள், சிவில் சமூக நிறுவனங்கள் மற்றும் பெண் உரிமை அமைப்புகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளுமாறு விசேட குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பர்னாந்துபுல்லே இங்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதற்கமைய, இந்த சட்ட மூலம் தொடர்பான கருத்துக்களை பெற்றுக்கொள்ள மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் என்பவற்றின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் வெளியிடுவதற்கும் பத்திரிகை விளம்பரம் வெளியிடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...