புதிய மின் இணைப்புகளை பெற 35,000 பேர் காத்திருப்போர் பட்டியலில்!

Date:

வாடிக்கையாளர்களுக்கு புதிய மின்சார இணைப்புகளை வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக புதிய இணைப்புகளை வழங்குவதற்கு தேவையான மின்சார மீட்டர்கள் உள்ளிட்ட பல உபகரணங்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய இணைப்புகளைப் பெறுவதற்காக தற்போது 35,000 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர்  தெரிவித்தார்.

எனினும் எதிர்வரும் 3 மாதங்களில் இவர்களுக்கு புதிய இணைப்புகள் வழங்கப்படும் எனவும் சிரேஷ்ட பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இலங்கை மின்சார சபைக்கு மாதாந்தம் 250 மின்மாற்றிகள் தேவைப்படுகின்றன.

ஆனால் தற்போதைய டொலர் நெருக்கடியை கருத்தில் கொண்டு மாதாந்தம் சுமார் 100ஐ பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...