புத்தளத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் இலங்கை ஸெபக்தக்ரோ தேசிய அணிக்கு தெரிவு!

Date:

இலங்கை ஸெபக்தக்ரோ தேசிய அணியில் நால்வர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
நால்வரில் இரட்டை பிள்ளைகளான கண்டி, கெந்தலியத்த ஹசினி சந்துனிக்கா மற்றும் ஸஹினி ஹிருனிகா ஆகியோர் இரட்டை சகோதரிகள் ஆவர்.
அம்பதென்னை புஷ்பதான கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் கண்டி மஹாமாயா பாலிகா கல்லூரியில் க.பொ.த. உயர் தரம் கற்ற ஹசினி சந்துனிகா மற்றும் ஸஹினி ஹிருனிகா இரட்டை சகோதரிகள் சபரகமுவ பல்கலைக் கழகத்தில் உடற் கல்வி பட்டதாரிகளாவர்.
பாடசாலை காலம் முதல் விளையாட்டுகளில் விசேட திறமைகளைக் காட்டிய இருவரும் கால்பந்தாட்டத்தில் தேசிய மட்ட வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
மெய்வல்லுனர் போட்டிகளில் அகில இலங்கை மட்டம் வரை தகைமை பெற்றுள்ளதுடன் 2019 இல் நடைபெற்ற 13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கோ-கோ (Kho-Kho) விளையாட்டுப் போட்டியில் சப்ரகமுவ பல்கலைக் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்தனர்.
புத்தளம் Kumpulan Melayu Di (KMP) பெண்கள் அணியின் வீராங்கனைகளான ஹசினி – ஸஹினி ஆகியோர் இலங்கை ஸெபக்தக்ரோ அணியில் அங்கத்துவம் வகிப்பதுடன் டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் பங்களாதேஷ், டாக்கா தலைநகரில் நடைபெறும் நான்காவது தெற்காசிய ஸெபக்தக்ரோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை மகளிர் அணியில் விளையாடுகின்றார்கள்.
இதேவேளை புத்தளம் நகரின் ஹிஷாம் ஹுஸைன் மற்றும் இல்மியா தம்பதியின் மகன்களான அதீப் ஹஸன் மற்றும் அஸ்ஹார் ஹுஸைன் ஆகியோர் இரட்டையர்கள் ஆவர்.
இவர்கள் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில் பாடசாலைக் ஆரம்பக் கல்வியை நிறைவுசெய்து பல்கலைக் கழக நுழைவுக்காக (2021/2022) காத்திருக்கின்றனர்.
புத்தளம் Kumpulan Melayu Di (KMP) விளையாட்டுக் கழகத்தின் ஸெபக்தக்ரோ அணியின் வீரர்களான அதீப் மற்றும் அஸ்ஹார் இரட்டையர்கள்  நான்காவது தெற்காசிய ஸெபக்தக்ரோ சாம்பியன்ஷிப் போட்டி 2022 இலங்கை அணியில் விளையாடுகின்றார்கள்.
மேலும்  இருவரும் புத்தளம் விம்பில்டன் கழகத்தின் கால்பந்தாட்ட அணியிலும் விளையாடுகின்றனர்.

இதேவேளை நால்வரும் உயர் கல்வியினாலும் விளையாட்டுத் துறையினாலும் எதிர்காலத்தை வெற்றிகரமாக்குவதிலும் சர்வதேசிய விளையாட்டுப் போட்டிகளில் தாய்நாட்டுக்கு வெற்றிகளை மற்றும் புகழை வென்றுதரும் திடசங்கற்பத்துடன்  இருக்கின்றனர்.

தகவல்: எம்.யூ.எம்.சனூன்

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...