மத்தள சர்வதேச விமான நிலைய செலவுகள் தொடர்பில் அறிக்கை!

Date:

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செலவு (செயல்பாட்டுச் செலவு) 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும், ஆனால் அந்தச் செலவு வருமானத்தை விட இருபது மடங்கு அதிகம் எனவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக செலவிடப்பட்ட 3656 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையும் உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மத்தள விமான நிலையத்தின் 2021ஆம் ஆண்டு வரிக்குப் பிந்திய நிகர நட்டம் 400 கோடி ரூபாவாகவும், 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை வரிக்குப் பிந்திய நிகர இழப்பு 2000 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என கணக்காய்வுத் திணைக்களத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்தின் வருடாந்த பயணிகளின் எண்ணிக்கை பத்து இலட்சம் என்றாலும், கடந்த ஐந்து வருடங்களில் 90,747 பயணிகளே வந்துள்ளதாக தணிக்கை அறிக்கை கூறுகிறது.

விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக பெறப்பட்ட 19 கோடி அமெரிக்க டொலர் கடனுக்கான வட்டி உட்பட வருடாந்த கடன் தவணையாக 261 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை நிறுவனம் செலுத்தியுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (09) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...