மத்திய வங்கியின் திருத்தப்பட்ட சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Date:

மத்திய வங்கி சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலம் 2019.11.01 அன்று அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டிருப்பினும், நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் அது உட்சேர்க்கப்படவில்லை.

சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் இலங்கை மத்திய வங்கியின் நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனாகவும் பயன்வாய்ந்ததாகவும் மேற்கொள்வற்கு இயலுமாகும் வகையில் ஆரம்ப சட்டமூலத்திற்கு புதிய திருத்தங்களை உட்சேர்த்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலத்திற்காக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...